இளம் பெண் விபரீதம்
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியை சேர்ந்தவர் முருகேசன்; ஓசூர் கால்நடை மருத்துவமனையில் உள்ள கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா மகள் லட்சுமி, 24,க்கும், 2016ல், திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முருகேசன் வெளியூரில் உள்ளதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்த லட்சுமி, அவரது அம்மா வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு, அனைவரும் துாங்கி கொண்டிருந்த போது, 1:30 மணிக்கு துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, ஆறு ஆண்டு ஆகி உள்ளதால், உதவி கலெக்டர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
மொபட் - லாரி மோதல்
கட்டட தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 41; கட்டட தொழிலாளி. இவர், கடந்த 11ம் தேதி மாலை, 6:45 மணியளவில் டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸெல் மொபட்டில் கிருஷ்ணகிரி - சென்னை சாலை, கிட்டம்பட்டி பாலம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, அவர் மீது மோதியது. படுகாயமடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் போன் திருடியவர் கைது
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளியை சேர்ந்தவர் மாதேஷ், 30; பாலதோட்டம் பகுதியில் மொபைல் போன் கடை வைத்துள்ளார். கடந்த, 10ல், இவரது கடைக்கு வந்த ஒருவர் கடையில் இருந்த மொபைல் போனை திருடி சென்றார். அதன் மதிப்பு, 10 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து மாதேஷ் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மொபைலை திருடியது மலையாண்டஹள்ளி பகுதி மணிகண்டன்,25, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இரும்பு கம்பி குத்தி தொழிலாளி பலி
ஓசூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாக்குல் போரோ, 36; சூளகிரி அடுத்த சப்படியில் தங்கியிருந்து, தனியார் கிரானைட் நிறுவனத்தில், கட்டிங் மிஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த, 7 மாலை பணியில் இருந்த பாக்குல் போரா மீது, கிரானைட் கல் மெல்ல, மெல்ல சாய துவங்கியது. இதனால், அங்கிருந்து தப்பிக்க, பின்புறமாக பாக்குல் போரோ சென்றார். அப்போது பின்னால் இருந்த இரும்பு அவர் மீது குத்தியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பழ வியாபாரி தற்கொலை
ஓசூர்: திருப்பத்துார் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவன் மகன் ஆகாஷ், 20; ஓசூர் ராம்நகரில் தங்கியிருந்து, பழ வியாபாரம் செய்து வந்தார்; இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது பெற்றோர் கேள்வி கேட்டனர். இதனால் விரக்தியடைந்த ஆகாஷ் கடந்த, 11ம் தேதி இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE