தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்

Added : மே 14, 2022
Advertisement
ஓசூரில், தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வரும், 22 ல் நடக்கும், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன் மகள் திருமண வரவேற்பு மற்றும் தேன்கனிக்கோட்டை அருகே நடக்கும், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசரெட்டி மகன் திருமண வரவேற்பு, அரசு சார்பில் நடக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், தி.மு.க., மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல்


ஓசூரில், தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வரும், 22 ல் நடக்கும், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன் மகள் திருமண வரவேற்பு மற்றும் தேன்கனிக்கோட்டை அருகே நடக்கும், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசரெட்டி மகன் திருமண வரவேற்பு, அரசு சார்பில் நடக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், தி.மு.க., மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உதயநிதி எம்.எல்.ஏ., வருகை தருகிறார்.
இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஓசூரில் நேற்று
அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகராட்சி மேயர் சத்யா முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசினார். கூட்டத்தில், வரும், 22 ல் வருகை தரும் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை குறித்த பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல தலைவர் காந்திமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X