துவாரகாபுரியில் 2 மின்கம்பங்கள் மாற்றம்

Added : மே 14, 2022
Advertisement
கிருஷ்ணகிரி ஒன்றியம், பெரியமுத்துார் பஞ்., துவாரகாபுரி கிராமத்தில், கே.ஆர்.பி., அணைக்கு செல்லும் சாலையோரம் இடதுபுற வாய்க்காலையொட்டி உள்ள மின்கம்பத்தின் அடிபாகம் இரண்டு இடங்களில் துண்டாகி மின்கம்பியின் உதவியால் நின்றது. அதே போல் அதற்கு எதிரில் உள்ள மின்கம்பத்தின் கீழ் பகுதி துண்டாகி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயத்தில் இருந்தது. மேலும், கிராமத்தின்


கிருஷ்ணகிரி ஒன்றியம், பெரியமுத்துார் பஞ்., துவாரகாபுரி கிராமத்தில், கே.ஆர்.பி., அணைக்கு செல்லும் சாலையோரம் இடதுபுற வாய்க்காலையொட்டி உள்ள மின்கம்பத்தின் அடிபாகம் இரண்டு இடங்களில் துண்டாகி மின்கம்பியின்
உதவியால் நின்றது.
அதே போல் அதற்கு எதிரில் உள்ள மின்கம்பத்தின் கீழ் பகுதி துண்டாகி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயத்தில் இருந்தது. மேலும், கிராமத்தின் நடுவில் உள்ள இரண்டு மின்கம்பத்தின் முக்கால் பகுதி சிமெண்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தான முறையில் கம்பிகள் வெளியே தெரிந்தது.
இக்கம்பங்கள் பலத்த காற்றடித்தால் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இதையடுத்து நேற்று காலை, முதல் கட்டமாக மிகவும் சேதம் அடைந்த இரண்டு மின்கம்பங்களை மாற்றும் பணிகள் நடந்தன. மற்ற இரண்டு கம்பங்களையும், மின்கம்பம் வந்தவுடன் விரைவில் மாற்றப்படும் என மின்துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X