நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு

Added : மே 14, 2022 | |
Advertisement
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள, 'தங்க நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்' பயிற்சி, பர்கூர் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ்

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள, 'தங்க நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்' பயிற்சி, பர்கூர் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின்
சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவர்கள் தேசிய வங்கிகள் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதீப்பீட்டாளராகப் பணியாற்றலாம்.
சனி மற்றும் ஞாயிற்று
கிழமை, 100 மணிநேரப் பயிற்சியாக நடைபெறும். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சில் சேர விரும்புவோர் முதல்வர், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பர்கூர் என்ற முகவரியில் மார்பளவு புகைப்படத்துடன் நேரில் வந்து, 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்று, பயிற்சி கட்டணமாக, 4,544- ரூபாய் செலுத்த வேண்டும்.
இதற்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய மேலும் விபரங்களுக்கு 04343- 265652 என்ற எண்ணிலோ மற்றும் 99448- 20545, 95009 -61603 என்ற மொபைல் எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X