மாணவன் விபரீத முடிவு

Added : மே 14, 2022
Advertisement
ராயக்கோட்டை அருகே, தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த லிங்கனம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் ஹரிஸ், 17. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்; கடந்த சில மாதமாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தனது தந்தையிடம் புதிய மொபைல்போன் வேண்டும் என ஹரிஸ் கேட்டுள்ளார். ஆனால், மொபைல் வாங்கி கொடுக்க அவரது


ராயக்கோட்டை அருகே, தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த லிங்கனம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் ஹரிஸ், 17. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்; கடந்த சில மாதமாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் தனது தந்தையிடம் புதிய மொபைல்போன் வேண்டும் என ஹரிஸ் கேட்டுள்ளார். ஆனால், மொபைல் வாங்கி கொடுக்க அவரது தந்தை கோவிந்தராஜன் மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த ஹரிஸ், நேற்று முன்தினம் லிங்கனம்பட்டியில் உள்ள கால்நடை கொட்டகையில், விஷம் குடித்து மயங்கினார்.
அவரை மீட்ட உறவினர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவன் ஹரிஸ் உயிரிழந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X