ஓசூரில், பெண்ணிடம் பணம் திருடிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர் அண்ணா நகர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி உமா மகேஸ்வரி, 32; வக்கீல் ஒருவரது அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, பாகலுார் சாலையில் உள்ள ஜி.ஆர்.டி., பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பெண்கள், உமா மகேஸ்வரி கவனத்தை திசை திருப்பி, அவரது கைப்பையில் இருந்த, 3,100 ரூபாயை திருடினர். இதை கவனித்த உமா மகேஸ்வரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மூன்று பெண்களையும் கையும், களவுமாக பிடித்து, ஹட்கோ போலீசில் ஒப்படைத்தார். ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த குப்பம் கங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மனைவி ஜோதி, 30, கிருஷ்ணா மனைவி ஜோதி, 32, இளங்கோ மனைவி சபீனா, 25, என்பது தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீசார், பணத்தை
பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE