கணவரை பூரி கட்டையால் தாக்கிய மனைவி மீது வழக்கு| Dinamalar

கணவரை பூரி கட்டையால் தாக்கிய மனைவி மீது வழக்கு

Added : மே 14, 2022 | |
ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா,25. இவரது கணவர் சசிகுமார்,33. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சசிகலா, தன் தாய் வீட்டார் போட்ட, 12 பவுன் நகையை கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த சசிக்குமார், அவருடைய தந்தை மாது,53, தாய் பட்டு,50, உறவினர் சக்திவேல்,49, ஆகியோர் சேர்ந்து சசிகலாவை தாக்கியுள்ளனர். சசிகலா

ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா,25. இவரது கணவர் சசிகுமார்,33. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சசிகலா, தன் தாய் வீட்டார் போட்ட, 12 பவுன் நகையை கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த சசிக்குமார், அவருடைய தந்தை மாது,53, தாய் பட்டு,50, உறவினர் சக்திவேல்,49, ஆகியோர் சேர்ந்து சசிகலாவை தாக்கியுள்ளனர். சசிகலா சாமல்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் படி, எஸ்.ஐ., அமர்நாத் வழக்கு பதிவு செய்து, கணவர் சசிகுமார், மாமனார் மாது ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சசிகுமாரை, மனைவி பூரி கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த கணவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் படி, சமல்பட்டி போலீசார் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X