செய்திகள் சில வரிகளில் ஈரோடு

Added : மே 14, 2022
Advertisement
செம்முனிசாமி கோவில் விழா நிறைவுஅந்தியூர்: பட்லுார் செம்முனிசாமி கோவிலில் நடப்பாண்டு விழாவில், முக்கிய நிகழ்வான குட்டிக்குடி விழா கடந்த மாதம், 29ல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் மறு பூஜையுடன் கோவில் பண்டிகை நேற்று நிறைவடைந்தது.சாரதா மாரியம்மன் கோவிலில் வழிபாடுகோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை


செம்முனிசாமி கோவில் விழா நிறைவு
அந்தியூர்: பட்லுார் செம்முனிசாமி கோவிலில் நடப்பாண்டு விழாவில், முக்கிய நிகழ்வான குட்டிக்குடி விழா கடந்த மாதம், 29ல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் மறு பூஜையுடன் கோவில் பண்டிகை நேற்று நிறைவடைந்தது.
சாரதா மாரியம்மன் கோவிலில் வழிபாடு
கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 5ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 11ல், அம்மன் சன்னதி எதிரே திருக்கம்பம் நடப்பட்டது.
கம்பத்துக்கு பக்தர்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வழிபட்டு செல்கின்றனர். வரும், ௧6ல் சந்தனக்காப்பு அலங்காரம், 19ல் மாவிளக்கு, பொங்கல் வைபவம், கம்பம் எடுத்தல் நடக்கிறது. 20, 21ல் மஞ்சள் நீர் உற்சவம் நடக்க உள்ளது.
முட்டை திருவிழா ஜோர்
பெருந்துறை: ஈரோடு மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளர் நலச்சங்கம் இணைந்து, பெருந்துறையில் நேற்று முட்டை திருவிழாவை நடத்தினர். பெருந்துறை டவுன் பஞ்., தலைவர் ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தார். இதில் பயணிகள், மக்களுக்கு முட்டை இலவசமாக வழங்கப்பட்டது.

வாரச்சந்தையில் கூடுதல் சுங்கம்
வசூலித்தால் நடவடிக்கை பாயும்
பெருந்துறை, மே 14-
கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., சார்பில், ஞாயிற்றுக் கிழமை தோறும் பெருந்துறை வாரச்சந்தை கூடுகிறது. அரசிதழிலில் வெளியிடப்பட்ட சுங்க
கட்டணம் மட்டுமே, வாரச்சந்தை குத்தகைதாரர் வசூலிக்க வேண்டும். வசூலிக்கப்படும் தொகைக்கு ரசீது வழங்க வேண்டும்.
வசூலிக்கப்படும் சுங்க கட்டண விபரம், குத்தகைதாரர் பெயர் மற்றும் முகவரி அடங்கிய விளம்பர பலகையை, சந்தை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று, டவுன் பஞ்., செயல்
அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அங்ககப்பண்ணையில் ஆய்வு
ஈரோடு, மே 14-
ஈரோடு அடுத்த மாமரத்துப்பாளையம் கிராமத்தில், இயற்கை முறையில் காய்கறி பயிரிடும் பண்ணையில், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''அங்ககச்சான்று முறைப்படி விவசாயம் செய்வோர், அங்ககச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து, விளை பொருட்களை விற்று, அதிக லாபம் பெறலாம்,'' என்றார். அங்கக விவசாயி கோபால், ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் முறை, இனக்கவர்ச்சி முறையை பற்றி செயல் விளக்கம் அளித்தார்.
அங்ககச்சான்று ஆய்வாளர் மகாதேவன், வேளாண் அலுவலர்கள் சுகன்யா, கணேசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

கடையடைப்புக்கு
ஏ.ஐ.டி.யு.சி., ஆதரவு
ஈரோடு, மே ௧௪-
ஜவுளித்துறை கடையடைப்பில், ஏ.ஐ.டி.யு.சி., பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் சின்னசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் ஜவுளி சார்ந்த தொழிலில், 12 கோடிக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் முக்கிய மூலப்பொருளான நுால் விலை கடுமையாக உயர்கிறது.
இதற்கு பஞ்சு, நுால் பதுக்கலும், வசதி படைத்தவர்கள் ஆன்லைனில் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதுமாகும். ஈரோடு மாவட்டத்தில் வரும், 16, 17ல் ஜவுளித்துறையினர் கடையடைப்பு அறிவித்துள்ளனர். இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டக்குழு ஆதரவு வழங்குகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்
ஒரே நாளில் 1.25 அடி உயர்வு
அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை, விடிய விடிய பெய்தது. வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில், 80 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணை நீர்மட்டம், 27.4 அடியாக இருந்து, ஒரே நாளில், 28.5 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில், 1.25 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணை மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாரியூர் கோவில்களில் பாலாலயம்
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஐந்தாவது கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் திருப்பணி துவக்க விழா நிகழ்வாக, கொண்டத்துக்காளியம்மன் மற்றும் அமரபணீஸ்வரர் கோவில்களில், பாலாலயம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதன்டி இரு கோவில்களின் விமானம் மற்றும் கோபுரம், ஆகமவிதிப்படி கண்ணாடிகளில் ஆவாகனம் செய்யப்பட்டது. நிகழ்வில் கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் மற்றும் அறநிலையத்துறையினர் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சாலை துறை சார்பாக
வாகனங்கள் கணக்கெடுப்பு
சென்னிமலை: நெடுஞ்சாலை துறை சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கணக்கெடுப்பது வழக்கம். இதன்படி தமிழகம் முழுவதும் கடந்த, 9-ம் தேதி முதல் வாகன கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடக்கிறது. வரும், 16-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதன்படி சென்னிமலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர் ரோடு, வெள்ளோடு ரோடு, ஊத்துக்குளி ரோடு, மற்றும் கொடுமணல் ரோடு ஆகிய இடங்களில், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். சைக்கிள் முதல் கனரக வாகனம் வரை அனைத்தும் கணக்கெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதில் சென்னிமலை - காங்கேயம் பிரதான சாலையில், 15 நிமிடத்தில், 600 வாகனங்கள் கடப்பது தெரிய வந்துள்ளது.
மாவட்ட அளவில் பரவலாக மழை
ஈரோடு: மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ததால், நேற்று இதமான சூழல் நிலவியது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, தாளவாடியில், 83.2 மி.மீ., மழை பெய்துள்ளது. பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): வரட்டுப்பள்ளம்-80, அம்மாபேட்டை-41.6, பவானி-19.6, கோபி-18, மொடக்குறிச்சி-18, கவுந்தப்பாடி-16.6, பெருந்துறை-15, இலந்தைகுட்டை-14.2, குண்டேரிப்பள்ளம்-13.2, கொடிவேரி-13, சத்தியமங்கலம்-12, ஈரோடு-10, நம்பியூர்-8, சென்னிமலை-7.6, பவானிசாகர்-6.4, கொடுமுடி-4.2.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X