நகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தர்ணா

Added : மே 14, 2022
Advertisement
கோபி நகராட்சி அவசர கூட்டம், சேர்மன் நாகராஜ், பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று காலை நடந்தது.இதில், ௧2வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சுமையாபானு, தனது வார்டு பகுதியில் குடிநீர் பைப் லைன் பிரச்னையை வலியுறுத்தி, சேர்மன் இருக்கை எதிரே, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குடிநீர் பிரச்னை சரி செய்யப்படும் என சேர்மன் கூறியதும், கவுன்சிலர் தனது


கோபி நகராட்சி அவசர கூட்டம், சேர்மன் நாகராஜ், பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று காலை நடந்தது.
இதில், ௧2வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சுமையாபானு, தனது வார்டு பகுதியில் குடிநீர் பைப் லைன் பிரச்னையை வலியுறுத்தி, சேர்மன் இருக்கை எதிரே, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குடிநீர் பிரச்னை சரி செய்யப்படும் என சேர்மன் கூறியதும், கவுன்சிலர் தனது இருக்கையில் அமர்ந்தார். இதனால் பத்து நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கவுன்சிலர்களின் விவாதம் தொடர்ந்தது. 25வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பிரினியோ கணேசன் பேசுகையில், ''மழை காலத்தில் தெருவிளக்கு கோளாறானால், மின் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. போதிய பணியாட்களை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
ஒன்பதாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், ''நகராட்சி பணியாளர்களுக்கு, கடனுதவி சரியாக வழங்கப்படுவதில்லை. நகராட்சியில் இரு பிட்டர்கள் என்ன வேலை செய்கின்றனர். குடிநீர் வழங்கும் பணியை சரிவர செய்ய வேண்டும்,'' என்றார். காலை, 10:00 மணிக்கு துவங்கிய கூட்டம், ௧1:30 மணிக்கு நிறைவு பெற்றது. கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X