'நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும்'

Added : மே 14, 2022 | |
Advertisement
'வாரம் ஒரு முறை நெசவு கூலியை, வங்கியில் செலுத்துவதை தவிர்த்து, வாரம் இரண்டு முறை ரொக்கமாக வழங்க வேண்டும்' என்று, கைத்தறித்துறை அரசு செயலரிடம், நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னிமலையில் செயல்படும், சென்னிமலை தொழிலியல், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், 600 உறுப்பினர்கள் பெட்ஷீட், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி ரகங்கள், துண்டுகள் மற்றும் தலையணை உறை உள்ளிட்ட


'வாரம் ஒரு முறை நெசவு கூலியை, வங்கியில் செலுத்துவதை தவிர்த்து, வாரம் இரண்டு முறை ரொக்கமாக வழங்க வேண்டும்' என்று, கைத்தறித்துறை அரசு செயலரிடம், நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னிமலையில் செயல்படும், சென்னிமலை தொழிலியல், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், 600 உறுப்பினர்கள் பெட்ஷீட், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி ரகங்கள், துண்டுகள் மற்றும் தலையணை உறை உள்ளிட்ட ரகங்களை நெசவு செய்து வருகின்றனர்.
இந்த சென்கோப்டெக்ஸ் சங்கத்துக்கு கைத்தறி ஆதரவு திட்டத்தில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், சென்னிமலையில் கட்டப்பட்ட சரக்கு இருப்பு கட்டடத்தை, கைத்தறி துறை அரசு செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நுால் ஆணையர் வள்ளலார் நேற்று பார்வையிட்டனர். மேலும், சங்க தொழிற்கூடத்தில் நெசவு நெய்து வரும் நெசவாளர்களிடம் குறை கேட்டறிந்தனர்.
அப்போது, 'வாரம் ஒரு முறை நெசவு கூலியை, வங்கியில் செலுத்துவதை தவிர்த்து, வாரம் இரண்டு முறை ரொக்கமாக வழங்க வேண்டும். முதியோர் ஒய்வூதிய தொகையை தாமதமின்றியும், ௨,௦௦௦ ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் பள்ளி சீருடை ரகத்தை தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். கோ-ஆப்டெக்ஸ் மூலம் சங்க ஜவுளிகளை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
காளிக்கோப் டெக்ஸ் சங்கத்திலும் புதிய கட்டடம், புதிய வடிவமைப்புகளை பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X