கைலாய வாத்தியம் முழங்க, சித்திரை தேரோட்ட விழா, கொடுமுடியில் கோலாகலமாக நடந்தது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் ஒன்றாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் மும்மூர்த்திகள் ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்ற, கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. முன்னதாக கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க விநாயகர், மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் சுவாமிகள் தனித்தனியே மூன்று தேர்களுக்கு எழுந்தருளினர்.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, கொடுமுடி டவுன் பஞ்., தலைவர் திலகவதி சுப்ரமணியம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். சிவனடியார் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியம் முழங்க தேரோட்டம்
துவங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேர்களை இழுத்தனர். மலையம்மன் கோயில் வீதி, கடைவீதி, மணிக்கூண்டு, மற்றும் காவேரிரோடு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியே தேர்கள் பவனி வந்து நிலை சேர்ந்தன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE