செய்திகள் சில வரிகளில் கரூர்

Added : மே 14, 2022
Advertisement
ஓய்வுபெற்ற காவல் துறைஅலுவலர் சங்க கூட்டம்கரூர், மே 14-ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் நலச்சங்க கூட்டம், தலைவர் கந்தசாமி தலைமையில் கரூரில் நடந்தது. அதில், அனைத்து காவலர்களுக்கும், காவல் துறை பண்டகசாலையில் மருந்துகள் வழங்க வேண்டும்; 70 வயதை தாண்டியவர்களுக்கு, 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற காவல் துறையினர் வாரிசுகளுக்கு வேலையில், 10 சதவீத இட

ஓய்வுபெற்ற காவல் துறை
அலுவலர் சங்க கூட்டம்
கரூர், மே 14-
ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் நலச்சங்க கூட்டம், தலைவர் கந்தசாமி தலைமையில் கரூரில் நடந்தது. அதில், அனைத்து காவலர்களுக்கும், காவல் துறை பண்டகசாலையில் மருந்துகள் வழங்க வேண்டும்; 70 வயதை தாண்டியவர்களுக்கு, 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற காவல் துறையினர் வாரிசுகளுக்கு வேலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வேலுச்சாமி, துணைத்தலைவர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அரசு பள்ளியில் சிறந்த
மாணவர் விருது வழங்கல்
கரூர், மே 14-
க.பரமத்தி தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடந்தது. அதில், கடந்த ஐந்து மாதங்களில், விடுமுறை எடுக்காத, சிறந்த மாணவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, இரண்டு மாணவர்களுக்கும், சிறப்பு பரிசுக்கு தேர்வு பெற்ற, 22 பேருக்கும், எம்.எல்.ஏ., இளங்கோ பரிசு வழங்கினார். அப்போது, தலைமையாசிரியர் மூர்த்தி, வார்டு உறுப்பினர் நவீன்ராஜ், ஆசிரியர்கள் ரேவதி, கதிர்வேல் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்
பிரதோஷ விழா: பக்தர்கள் பங்கேற்பு
கரூர், மே 14-
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.
பிரதோஷத்தையொட்டி, பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, நந்தி சிலைக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 19 வாசனை திரவியங்கள் மூலம், அபி ேஷகம் நடந்தது. 5:30 மணிக்கு மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு
பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
சீரான விலையில்
வெற்றிலை விற்பனை
கிருஷ்ணராயபுரம், மே 14-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், வெற்றிலை சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், வீரவள்ளி, மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை, மகாதானபுரம், திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது, வெற்றிலை வரத்து சீராக இருப்பதால் விலையில் மாற்றம் இன்றி விற்பனை நடக்கிறது. 100 கவுளி கொண்ட மூட்டை, 7,000 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. மேலும், வெற்றிலை திருச்சி, தஞ்சாவூர், கரூர், மேட்டுப்பாளையம், ஆகிய இடங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடக்கிறது.

அரசு பஸ் மோதி வாலிபர் பலி
வாங்கல், மே 14-
வாங்கல் அருகே, அரசு பஸ் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நன்னியூர் புதுார் பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் பிரகாஷ்ராஜ், 18; இவர் கடந்த, 11 ல் பஜாஜ் பல்சர் பைக்கில், நன்னியூர் புதுார் ஒத்தை பனை மரம் பகுதியில், சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ் பிரகாஷ்ராஜ் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த, பிரகாஷ் ராஜ் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிந்தலவாடி புதிய கட்டளை
வாய்க்கால் படித்துறை சேதம்
கிருஷ்ணராயபுரம், மே 14-
சிந்தலவாடி புதிய கட்டளை வாய்க்கால் படித்துறை சேதம் காரணமாக, மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றிலிருந்து, புதிய கட்டளை வாய்க்கால் பெட்டவாய்த்தலை வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. படித்துறை வழியாக அந்த பகுதி மக்கள் வாய்க்காலில் நின்று குளித்து வருகின்றனர். தற்போது படித்துறை படிகள் சிமென்ட் கட்டைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்த படித்துறை படிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் பழைய
ஓட்டுனர் உரிம அட்டைகள்
கரூர், மே 14-
வெள்ளியணை அருகே, மூட்டையில் கட்டி வீசப்பட்ட பழைய ஓட்டுனர் உரிமம் மற்றும் விண்ணப்பங்களை, போலீசார் எடுத்து சென்றனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உப்பிடமங்கலம் மயானம் அருகே, கடந்த இரண்டு நாட்களாக, மூட்டை ஒன்று கிடந்தது. அதை, நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிரித்து பார்த்தனர். அதில், பழைய ஓட்டுனர் உரிம அட்டைகள், பழைய விண்ணப்பங்கள் இருந்தன.
மேலும், விண்ணப்பங்களில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் என, 'சீல்' அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின், சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளியணை போலீசார், பழைய ஓட்டுனர் உரிம அட்டைகள், விண்ணப்பங்களை, போலீசார் விசாரணைக்காக எடுத்து சென்றனர்.
சாக்கடை கால்வாயில்
கழிவுகளை அகற்றணும்
கரூர், மே 14-
கரூர் குளத்துப்பாளையத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், குப்பை கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளன. இதனால்,
வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர்
பல இடங்களில் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்தும், துர்நாற்றம்
வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது. இதனால், சாக்கடை
கால்வாயில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
மார்க்கெட்டில் குப்பை
நாள்தோறும் அகற்றப்படுமா?
கரூர், மே 14-
கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை
அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பை நிறைந்த பகுதியில் செல்லும் போது, முகம் சுளிக்கின்றனர். இதனால், ஈக்கள் அதிகம்
உற்பத்தியாகி, தொற்றுநோயை பரப்ப வசதியாக உள்ளது. மேலும்,
கரூரில் மழை பெய்து வரும் நிலையில், குப்பை அழுகாத வகையில்,
நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கழிப்பிடத்தை திறக்க
பொதுமக்கள் வேண்டுகோள்
கரூர், மே 14-
கரூர் அருகே, தொழிற்பேட்டை பகுதியில் பொதுமக்கள்
வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி
வந்தனர். சில மாதங்களுக்கு முன் கழிப்பிடம் பழுதடைந்தது. இதனால், கழிப்பிடத்தை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், கழிப்பிடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால்,
அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.பெண்கள் படும் சிரமத்துக்கு அளவே இல்லை. எனவே, கழிப்பிடத்தை
உடனடியாக சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு
விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X