கரூர் அருகே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சுக்காலியூர் பிரிவு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
கரூர் அருகே, திருச்சி பைபாஸ் சாலை மற்றும் மதுரை பைபாஸ் சாலையை இணைக்கும் பகுதியாக, சுக்காலியூர் பிரிவு சாலை உள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் கரூர் எல்லைக்குள் செல்லாமல், சுக்காலியூர் வழியாக செல்ல முடியும். இதனால், சுக்காலியூர் பிரிவு சாலை ரவுண்டானா அமைக்கப் பட்டுள்ளது. மேலும், மதுரை பைபாஸ் சாலையின் கீழ் பகுதியில், வாகனங்கள் செல்ல தனியாக வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரூரிலிருந்து, தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள், சுக்காலியூர் வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் உள்ள சாலை, குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால், சேலம், ஈரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், மதுரையிலிருந்து வரும் வாகனங்கள், திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் கரூரிலிருந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன. சில சமயங்களில், உயிர் பலியும் ஏற்படுகிறது.
இதனால், சுக்காலியூர் பிரிவு சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, விபத்தை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், சுக்காலியூர் பிரிவு சாலையில் ஏற்பட்டுள்ள, குண்டும், குழியுமான பகுதியை சரிசெய்ய, நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE