''கரூர் பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர
விடப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி மேயர் கவிதா தெரிவித்தார். கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி மேயர் கவிதா, நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிப்பிடங்களில் சுகாதார சீர்கேடு உள்ளதாக புகார் வந்தது. அதனடிப்படையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்ட தள்ளு வண்டிகளை அகற்ற உத்தர
விடப்பட்டுள்ளது. மேலும், சில கடைகள் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன. அதையும் அகற்றிக்கொள்ள, 15 நாட்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றாத, அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். வரி பாக்கி நிலுவையில் உள்ள, கடைகளுக்கு, 'சீல்' வைப்பது குறித்து, விரைவில் முடி
வெடுக்கப்படும்,'' என்றார்.
அப்போது, மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், மண்டல குழு தலைவர் அன்பரசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE