கடல் என் தாய், அலைகள் எனக்கு தாலாட்டு...

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | |
Advertisement
அலையோடு விளையாடலாம் வாஅளவில்லாமல் விளயைாடலாம் வாஇந்தியாவின் முன்னனி அலைச்சறுக்கு விளையாட்டு சர்பிங் பயிற்சியாளரான மூர்த்தி கரையில் இருந்த காலத்தை விட கடலில் இருந்த காலமே அதிகம் என்கிறார்.சென்னை கோவளம் கடற்கரையில் கடலை நம்பி பிழைக்கும் மீனவர் குடும்பத்தில் பிறந்தவர்.இவர் இளைஞனாக இருந்த போது வெளிநாட்டினர் கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட்டுlatest tamil newsஅலையோடு விளையாடலாம் வாஅளவில்லாமல் விளயைாடலாம் வா
இந்தியாவின் முன்னனி அலைச்சறுக்கு விளையாட்டு சர்பிங் பயிற்சியாளரான மூர்த்தி கரையில் இருந்த காலத்தை விட கடலில் இருந்த காலமே அதிகம் என்கிறார்.
சென்னை கோவளம் கடற்கரையில் கடலை நம்பி பிழைக்கும் மீனவர் குடும்பத்தில் பிறந்தவர்.இவர் இளைஞனாக இருந்த போது வெளிநாட்டினர் கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட்டு விளையாடுவதை ஆர்வத்தோடு பார்த்தார் ஆனால் அவர்களிடம் எப்படி கேட்பது என்ற தயக்கம் ஆகவே இவராககே வீட்டில் இருந்த உடைந்த மரக்கதவை ‛சர்பிங் போர்டு' போல மாற்றி சுயமாக அலைச்சறுக்கு விளயைாட்டை விளையாடி மகிழ்ந்தார்.


latest tamil news


மூர்த்தியின் ஆர்வத்தைப் பார்த்த ‛சர்பிங் சாமி' என்பவர் தனது சர்பிங் போர்டைக் கொடுத்து விளையாடச் சொன்னார் மலையேறும் பயிற்சி பெற்றவரை ஏணியில் ஏறச்சொன்னால் எப்படி அநாயசமாக ஏறுவாரோ? அது போல மரக்கதவில் சர்பிங் செய்தவருக்கு ஒரிஜினல் சர்பிங் போர்டு கிடைத்தால் சும்மா விடுவாரா?பத்து நிமிடம் கடல் அலைகளோடு ஆனந்தமாக ஆசை தீர விளையாடி மகிழ்ந்தார்.
மூர்த்தியின் திறமையை வியந்து பாராட்டிய ‛சர்பிங் சாமி' பின் தனது போர்டை வாங்கிக் கொண்டு போய்விட்டார் ஆனால் அந்த பத்து நிமிடம் மூர்த்தியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இனி சர்பிங்தான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார்.


latest tamil news


கோவளம் கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட வந்த யோதம்ஆகான் என்ற வெளிநாட்டுக்காரருக்கு மூர்த்தி செய்த உதவிகள் பிடித்துப் போனதால் போகும்போது தான் கொண்டு வந்த சர்பிங் போர்டை மூர்த்திக்கே நன்கொடையாக வழங்கிவிட்டு சென்று விட்டார்.
அதன்பிறகு கரையில் இருந்ததை விட மூர்த்தி கடலில் இருந்த நேரமே அதிகம்,சர்பிங் விளயைாட்டில் எத்தனை வித்தைகள் உண்டோ அத்தனையையும் முயற்சித்து பார்த்துவிட்டார்.தோபாய் போன்ற வெளிநாட்டு நண்பரின் ஆலோசனையும் உதவியும் கிடைக்க இந்த விளையாட்டில் மேலும் பலபடி முன்னேறினார்.இலங்கை,மலேசியா,இஸ்ரேல் உள்ளீட்ட நாடுகளில் நடந்த சர்பிங் போட்டியில் பங்கேற்றார்.கடல் எனக்கு தாய் போல இந்த அலை எனக்கு தாலாட்டு போல என்கிறார்.
விளயைாட்டுகளிலேயே அலைச்சறுக்கு விளயைாட்டுதான் ராஜ விளையாட்டு, அலைக்கு ஏழை பணக்காரன் பேதம் கிடையாது முதலாளி தொழிலாளி வித்தியாசம் புரியாது எல்லோருக்கும் ஓரே மாதிரி அலைதான் அந்த அலையை யார் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதில்தான் திறமையே இருக்கிறது.
சர்பிங் விளையாடுபவர்களுக்கு முதலில் நன்கு நீ்ச்சல் தெரியும்,தண்ணீர் பயம் இருக்காது ,யாராவது தண்ணீரில் தத்தளித்தால் முதலில் பாய்ந்து காப்பாற்ற முனைவார்கள்,உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை எல்லாவற்றுக்கும் வேலை இருப்பதால் முழுமையான நல்ல உடல்பயிற்சி.
உடலுக்கும் மனதிற்கும் உறுதியையும் உற்சாகத்தையும் தரும் இந்த விளையாட்டுக்கு பயிற்சி எடுக்க மட்டும் பணம் செலவழித்தால் போதும் பிறகு வசதிப்படி போர்டு வாங்கி வைத்துக் கொண்டால் கடற்கரை எங்கும் இந்த விளையாட்டை இலவசமாக விளையாடி மகிழலாம்.
இவ்வளவு சிறப்பான இந்த அலைச்சறுக்கு விளையாட்டை முறையாக கற்றுத்தருவதற்காக மூர்த்தி தனது பெயரிலேயே சர்ப் கிளப்பை கோவளம் கடற்கரை பகுதியிலேயே ஏற்படுத்தியுள்ளார்.சர்வதேச தரத்தில் இவரது கிளப் உள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த தேவையான விதம் விதமான சர்பிங் போர்டுகள் நுாற்றுக்கணக்கில் உள்ளன.இவரது மனைவி சரளா கிளப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளார்.,இவரது மகன்கள் தருண்,தமன் ஆகியோர் தந்தையிடம் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர் எதிர்காலத்தில் இந்த விளையாட்டில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுதந்து பெருமை பெற வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளனர்.இவரிடம் பயிற்சி பெற்று பயிற்சி தர தரமான பயிற்சியாளர் பட்டாளமே உள்ளது.இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பட்டியலில் பிரபல கிரிக்கெட் மற்றும் நடிகர்கள் பலரும் உள்ளனர்.
சர்பிங் விளையாட்டை ஏதோ பணக்காரர்களுக்கான விளையாட்டு போல கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் நிலையில் அது பாமரர்களுக்குமான விளையாட்டுதான் என்பதை மெய்பிக்கும் வகையில் மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும் அதற்கு காரணம் மற்ற எல்லோரையும் விட இந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணையும் விண்ணையும் கடலையும் அதிகளவு நேசிப்பவர் என்பதாலும் இருக்கலாம்.
கோவளம் கடற்கரை குளோபல் மேப்பில் இடம் பெற காரணமானவர் என்ற வகையிலும், மீனவக்குடும்பத்தில் பிறந்து இன்றைக்கு சர்வதேச சர்பிங் விளையாட்டு பயிற்சியின் முன்னனி பயிற்சியாளர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் என்ற காரணத்தினாலும் மூர்த்திக்கு எப்போதுமே உள்ளூரில் தனி மதிப்புதான்.
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இவரிடம் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர், இந்த விளையாட்டை மாணவ மாணவியர் இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தற்போது கோடை கால சிறப்பு பயிற்சி முகாமை குறைந்த கட்டணத்தில் துவங்க உள்ளார்,விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:90030 52231,9840975916.
-எல்.முருகராஜ்.
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X