கத்திரி வெயிலில் துவங்கிய நிலையில், தொடர் மழை பெய்து வருவதால், நாமக்கல் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த, 4ல், துவங்கிய கத்திரி வெயில், வரும், 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வழக்கமாக கத்தரி வெயில் துவங்குவதற்கு முன், கடந்த ஒரு வாரமாகவே, 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடந்த, 4ல், அதிகபட்சமாக, 104 டிகிரி பதிவானது.
இந்நிலையில், கத்தரி வெயில் துவங்கிய முதல் நாளில், மாவட்டம் முழுவதும், பரவலாக லேசான மற்றும் இடி, மின்னலுடன், கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, கோடை மழை அவ்வப்போது பெய்து, குளிர்காற்று வீசுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த, சில நாட்களாக வெயிலில் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மழையும் பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 7:00 மணி வரை பதிவாகி உள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு: எருமப்பட்டி, 5, குமாரபாளையம், 18.40, மங்களபுரம், 5.60, நாமக்கல், 5, ப.வேலுார், 4, புதுச்சத்திரம், 21, ராசிபுரம், 19.80, சேந்தமங்கலம், 6, திருச்செங்கோடு, 12, கலெக்டர் அலுவலகம், 14, கொல்லிமலை, 23 என, மொத்தம், 133.80 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE