பள்ளிபாளையத்தில் குடியிருப்பு, சாய ஆலை கழிவு நீர் அதிகளவு கலப்பதால், ஆறு சீரழிந்து தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது.
பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாய ஆலைகள் கழிவுநீரும், வடிகால் வழியாக சென்று, இறுதியில் வசந்தநகர், பெரியார்நகர், ஒன்பதாம்படி, சந்தைபேட்டை, ஆவத்திபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காவிரி ஆற்றில் கலக்கிறது. மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதராமாக உள்ள ஆற்றில், இவ்வாறு கழிவுநீர் கலப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது.
கடந்த, 20 ஆண்டுக்கு முன்பே வெண்மையாக, சுத்தமாக இருந்த ஆற்று நீர், தற்போது கருப்பு நிறத்தில் உள்ளது. அந்தளவுக்கு குடியிருப்பு, சாய ஆலை கழிவுநீரும் ஒன்றாக கலந்துள்ளன. தற்போது ஆற்றோரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால ஆறு சீரழிந்து, சுகாதார கேடாக காணப்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஆற்றை சீரழிக்கும் கழிவுநீர் கலப்பை தடுக்க, கடும் நடவடிக்கை எடுத்து, காவிரி மாசடையும் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE