ஆன்லைனில் பணம் இழந்தால் '1930'க்கு டயல் பண்ணுங்க!

Added : மே 14, 2022
Advertisement
ஆன்லைனில் பணம் இழந்தவர்கள், '1930' என்ற எண்ணுக்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சில மோசடி பேர்வழிகள், மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டி வருகின்றனர். இதுகுறித்து, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:குறைந்த வட்டியில் கடன் தருவதாக வரும் தகவல்களை நம்பாதீர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை


ஆன்லைனில் பணம் இழந்தவர்கள், '1930' என்ற எண்ணுக்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சில மோசடி பேர்வழிகள், மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டி வருகின்றனர். இதுகுறித்து, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
குறைந்த வட்டியில் கடன் தருவதாக வரும் தகவல்களை நம்பாதீர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை நம்பி, வங்கி கணக்கு விபரம், ஓ.டி.பி.யை யாரிடமும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை, பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் என வரும் போலி குறுந்தகவலை நம்பி ஏமாறாதீர். அப்படி யாரேனும், ஆன்லைன் மூலம் பணத்தை இழந்துவிட்டால், உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்ணான, 1930க்கு தொடர்பு கொள்ள வேண்டும். துரிதமாக நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத்தர முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X