தி.மு.க., வெற்றி கண்களை உறுத்துகின்றன எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதிலடி

Added : மே 14, 2022
Advertisement
''தி.மு.க.,வின் தொடர் வெற்றி அனைவரது கண்களையும் உறுத்துகின்றன,'' என, அமைச்சர் நேரு பேசினார்.சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர்.அதில், ஆத்துாரில்


''தி.மு.க.,வின் தொடர் வெற்றி அனைவரது கண்களையும் உறுத்துகின்றன,'' என, அமைச்சர் நேரு பேசினார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர்.
அதில், ஆத்துாரில் வரும், 18ல் நடக்க உள்ள, தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடு செய்வது, லட்சத்துக்கும் அதிகமானோரை பங்கேற்க வைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அமைச்சர் நேரு பேசியதாவது: லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அவர்கள் ஆட்சியில் வைத்துவிட்டு சென்ற ஒப்பந்த தொகைக்குத்தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. தி.மு.க., மேற்கொள்ளும் சின்ன விஷயங்களை கூட எதிர்த்தால்தான் அரசியல் வாழ்வு என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். சிறு காரியங்களை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதே நிலையில்தான், அ.தி.மு.க.,வும் உள்ளது.
தி.மு.க.,வின் தொடர் வெற்றி, அனைவரது கண்களையும் உறுத்துகின்றன. தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தும் வாய்ப்பு, முதலில் சேலம் மாவட்டத்துக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்கள் ஆதரவு முதல்வருக்கு உண்டு என்பதை, அ.தி.மு.க., - பா.ஜ.,வினருக்கு காட்டவே, சேலம் மாவட்டத்தில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X