விதை விற்பனை நிலையத்தை புதுப்பித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம், விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் விதைச்சான்று, அங்கக சான்று துறையின், விதை ஆய்வு பிரிவின்படி, விதை விற்பனை உரிமம் - 800 வழங்கப்பட்டுள்ளது. அதன் காலம், 5 ஆண்டு. உரிமம் காலாவதியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து மேலும், 5 ஆண்டுக்கு புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
உரிமம் புதுப்பிக்க கோரும் விண்ணப்பம்(இ படிவம்), அசல் உரிமம், புதுப்பிக்க கட்டணம், 500 ரூபாய் செலுத்தியமைக்கு சலான், கட்டட வரைபடம், நிலையம், வாடகை கட்டடமெனில் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திர நகல், சொந்த கட்டடமெனில் வீட்டு வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அவற்றை விதை ஆய்வாளர்கள் மூலம் கள ஆய்வு செய்த பின், புதுப்பிக்கப்பட்ட விதை விற்பனை உரிமம் வழங்கப்படும். அதனால் அனைத்து விதை உற்பத்தியாளர், வினியோகஸ்தர், விற்பனையாளர், உரிய காலத்தில் விதை விற்பனை உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE