மேட்டூர் அணை நீர்வரத்து 7,487 கனஅடியாக அதிகரிப்பு| Dinamalar

மேட்டூர் அணை நீர்வரத்து 7,487 கனஅடியாக அதிகரிப்பு

Added : மே 14, 2022 | |
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 4,107 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 7,487 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 107.55 அடியாக இருந்தது. குடிநீருக்கு வினாடிக்கு, 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.மேட்டூர் அணை நீர்மட்டம்,


மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 4,107 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 7,487 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 107.55 அடியாக இருந்தது. குடிநீருக்கு வினாடிக்கு, 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த ஆண்டு அக்., 24ல், 100 அடியை எட்டியது. தொடர்ந்து, 202ம் நாளாக நேற்றும், 100 அடிக்கு மேல் உள்ளது. இதனால், ஜூன், 12ல், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X