செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : மே 14, 2022
Advertisement
குதிரை வாகனத்தில் பெருமாள்சங்ககிரி: சங்ககிரியில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவில், சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. அதன், 8ம் நாளையொட்டி, மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில், பெருமாள், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களால், நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இரவு, சுவாமி ராஜ அலங்காரத்தில் குதிரை

குதிரை வாகனத்தில் பெருமாள்
சங்ககிரி: சங்ககிரியில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவில், சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. அதன், 8ம் நாளையொட்டி, மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில், பெருமாள், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களால், நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இரவு, சுவாமி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
'கோ - கோ'வுக்கு நாளை வீரர் தேர்வு
சேலம்: சேலம் மாவட்ட அமெச்சூர் கோ - கோ கழக செயலர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை, எம்.டி.என்., சீனியர் பள்ளியில், 6வது மாநில கோ - கோ போட்டி, வரும், 18, 19ல் நடக்க உள்ளது. சேலம் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க விருப்பமுள்ள, 14 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள், வரும், 15ல், காந்தி மைதானத்துக்கு வர வேண்டும். அப்போது அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், 2008 ஜன., 1க்கு பின் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். படிப்பு சான்றிதழ், ஆதார், பிறப்பு சான்று நகல் கொண்டு வரவேண்டும். தகவலுக்கு, 94443 44272 என்ற எண்ணில் அழைக்கலாம்.

ஆக்கிரமிப்பு அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
சேலம், மே 14-
ஆக்கிரமிப்பில் இருந்த, சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பொக்லைனை சிறைபிடித்தனர்.
சேலம், ஹபீப் தெரு சாலையோரம், பழைய புத்தகங்கள், ஸ்வெட்டர் கடைகள் செயல்பட்டன. அந்த கடைகள், சாலை அமைப்பதற்காக அகற்றப்பட்டன. தற்போது சாலை பணி முடிந்த நிலையில், மீண்டும் கடை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.
இதை எதிர்த்து, நேற்று முன்தினம், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று, மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் மூலம், தற்காலிக கடைகளை அகற்றத்தொடங்கினர்.
அப்போது, இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலர் மோகன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், பொக்லைனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆண்டுக்கு மேலாக கடை வைத்து வருவதாக கூறினர். இதனால், கடைகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
பள்ளி விடுமுறையால் மகிழ்ச்சி
வாழப்பாடி: கொரோனா பொது முடக்கத்துக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து இயங்கி வந்தன. இந்நிலையில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மாணவ, மாணவியருக்கு நடந்து வந்த தேர்வு, நேற்றுடன் முடிந்தது. இதனால், இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று தேர்வு எழுதி முடித்ததும், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, மாணவர்கள் விடை பெற்றனர்.
அனுமதியற்ற குடிநீர் இணைப்பு 'கட்'
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய், வீட்டு உபயோகத்துக்கு செல்லும் குழாய்களில், நகராட்சி அனுமதியின்றி இணைப்பு கொடுத்து குடிநீரை உறிஞ்சினாலோ, மின்மோட்டார் வைத்து உறிஞ்சினாலோ, அதை துண்டிப்பதோடு, அபராதம் விதிக்கப்படும். மேலும், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.
இல்லம் தேடி கல்வி திட்ட விழா
வாழப்பாடி: அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குட்பட்ட பகுதியில் இயங்கும், இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு, ஒருகிணைந்த விழா நேற்று நடந்தது. வாழப்பாடி வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன் தலைமை வகித்தார். அதில், திட்ட நோக்கம், பயன்கள் குறித்து, மாணவ - மாணவியர், தன்னார்வலர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. தவறாமல் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை ஷபிராபானு உள்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் 109 பேருக்கு வேலை
சேலம்: கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. 27 நிறுவனங்கள், ஆட்களை தேர்ந்தெடுத்தன. 189 பேர் பங்கேற்றனர். நேர்முகத்தேர்வு முடிவில், 109 பேருக்கு வேலை கிடைத்தது.
ஒன்றிய கமிஷனர் பொறுப்பேற்பு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் செல்வகுமார், கடந்த ஏப்., 8ல் மருத்துவ விடுப்பில் சென்றார். அதன் பின் வந்த கமிஷனர் சாந்தாராம், ஏப்., 29ல், விருப்ப ஓய்வு பெற்றார். இதனால், கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில், இடைப்பாடி ஒன்றிய துணை பி.டி.ஓ., சீனிவாசன், பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு பெற்றார். அவர், பனமரத்துப்பட்டி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X