துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து 25 பேர் காயம்

Added : மே 14, 2022 | |
Advertisement
இடைப்பாடி, சித்துார் சாவடிபாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 70. உடல்நிலை சரியில்லாததால், கடந்த, 11ல் உயிரிழந்தார். அவரது துக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாள கல் நட, பழனியம்மாளின் மகன் அப்புசாமி, 55,நேற்று காலை, இடைப்பாடியில் இருந்து திருச்செங்கோட்டில் உள்ள திருமங்கலத்துக்கு பொலிரோ சரக்கு வேனில், 30க்கும் மேற்பட்டோரை அழைத்துச்சென்றார்.மதியம், 12:00 மணிக்கு, பூலாம்பட்டி


இடைப்பாடி, சித்துார் சாவடிபாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 70. உடல்நிலை சரியில்லாததால், கடந்த, 11ல் உயிரிழந்தார். அவரது துக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாள கல் நட, பழனியம்மாளின் மகன் அப்புசாமி, 55,நேற்று காலை, இடைப்பாடியில் இருந்து திருச்செங்கோட்டில் உள்ள திருமங்கலத்துக்கு பொலிரோ சரக்கு வேனில், 30க்கும் மேற்பட்டோரை அழைத்துச்சென்றார்.
மதியம், 12:00 மணிக்கு, பூலாம்பட்டி சாலை, சந்தன மில் பகுதியில் சென்றபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அதில், பெரியசாமி, 45, நாகராஜ், 32 படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதவிர, துர்கா, 30, ராசாத்தி, 47, ராமாயி, 45, முனியன், 45, அய்யந்துரை, 50, உள்பட, 23 பேர் காயம் அடைந்து, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X