உறவினர்கள் யாரும் வராததால் சிறையில் கைதி விபரீத முயற்சி

Added : மே 14, 2022 | |
Advertisement
உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால், சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.பெரம்பலுார் மாவட்டம், களரம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து, 29. இவரை, கடந்த நவம்பரில், திருட்டு வழக்கில், நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு, சிறையில் முதலுதவி


உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால், சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பெரம்பலுார் மாவட்டம், களரம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து, 29. இவரை, கடந்த நவம்பரில், திருட்டு வழக்கில், நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு, சிறையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'மாரிமுத்துவை ஜாமினில் எடுக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் உறவினர்களும் வந்து பார்க்காததால் வேதனையில் இருந்த மாரிமுத்து, கொசுவர்த்தி சுருளை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X