சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம்

Added : மே 14, 2022 | |
Advertisement
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மெத்தனமாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.காங்கேயம் வழியாக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகள் பல்வேறு நகரங்களை இணைக்கின்றன. இதில் மாவட்ட மற்றும் மாநில நெடுஞ்சாலை இருமருங்கிலும்


சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மெத்தனமாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காங்கேயம் வழியாக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகள் பல்வேறு நகரங்களை இணைக்கின்றன. இதில் மாவட்ட மற்றும் மாநில நெடுஞ்சாலை இருமருங்கிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் பல, 50 ஆண்டுகளை கடந்தவை.
இந்த மரங்களில் ஆணி அடித்து, நெகிழி மற்றும் பிளாஸ்டிக்காலான பள்ளி, கல்லுாரி விளம்பர பதாகைகள், ரியல் எஸ்டேட், கோச்சிங் சென்டர் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆணி அடிப்பதால் நாளடைவில் மரங்கள் காய்ந்து பட்டுப்போகின்றன. அரை நுாற்றாண்டை கடந்த மரங்கள், இரண்டாக பிளந்து விடுவதால், வெட்டி அகற்றும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இதை திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்ளாததால், மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வது அதிகரித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சில ஆண்டுக்கு முன், திருப்பூர் கலெக்டரின் உத்தரவால், இதுபோல் மரங்களில் விளம்பரம் செய்யும் நபர்கள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் விளைவாக, அனுமதி பெற்று கயிறுகளை கொண்டு விளம்பரங்கள் வைக்கப்பட்டன. இதனால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானமும் கிடைத்தது. தற்போது மீண்டும் மரங்களில் ஆணி அடிப்பது அதிகரித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X