தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில், கணவன்-மனைவி பூச்சி மருந்தை குடித்தனர். இதில் மனைவி இறந்தார்.
டி.என்.,பாளையம் அருகே கள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன், 35, விவசாயி; இவரின் மனைவி சரண்யா, 28; தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தனிக்குடித்தனம் செல்வது குறித்து, ஆறு மாதமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்தது.
உலர வைத்த துணியை எடுப்பதில், நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதைப்பார்த்த சரண்யா, கணவரிடம் இருந்து பிடுங்கி, அவரும் குடித்துள்ளார். இருவரும் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கிருந்து சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரண்யா இறந்தார். தனியார் மருத்துவமனையில் ஈஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். சரண்யாவின் தந்தை லட்சுமணன், 55, புகாரின்படி, பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE