பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெறவும், ஏற்கனவே பத்திரம் பெற்றிருந்தால் முதிர்வை பெறவும் மாவட்ட நிர்வாகம் அழைத்துள்ளது.
இதுபற்றி ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி,
வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற, ஆண் குழந்தை இன்றி, 2 பெண் குழந்தைகள் (2வது குழந்தைக்கு, 3 வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3 வயதுக்குள்) புதிதாக விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர்களில் ஒருவர், 40 வயதுக்குள், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஆண்டு வருவாய், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று, 19 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று நகல், சம்மந்தப்பட்ட நபர் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை ஜூன், 16க்குள் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக, கண்காணிப்பாளர்களிடம் வழங்கி முதிர்வு தொகை பெறலாம்.
இத்தொகையை பெறாதவர்கள் ஜூன், 16க்குள் பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்கப்படாது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE