'மியாவாக்கி' முறையில், நாட்டு மரக்கன்று மற்றும் பழ மரக்கன்றுகளை கொண்டு, அடர் வன குறுங்காடுகள் அமைக்க, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறியதாவது: மாறிவரும் சூழல், அதிகரிக்கும் நகரமயமாதலால், நமது சுற்றுச்சூழலை பேணிக்காப்பது வரும் தலைமுறைக்காக மிகவும் அவசியம். இதற்காக பல்வேறு பணிகளை செயல் திட்டங்களாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 'மியாவாக்கி' முறையில், தமிழ்நாடு முழுவதும் நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகள் நட்டு, அடர் வன குறுங்காடுகள் அமைத்திட (மிஷன் மியாவாக்கி) என்னும் பெயரில், புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி நகர மற்றும் ஊரக பகுதிகளில், காலியாக உள்ள சிறு இடங்களில் கூட, “மியவாகி” முறையில் எட்டு மரக்கன்றுகளை நெருக்கமாக நடவு செய்து, மக்கள் பங்களிப்போடு அடர்வன குறுங்காடுகள் அமைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த முறையில் குறுங்காடுகளை உருவாக்க, தேவையான ஆலோசனை, செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்க சுற்றுச்சூழல் அணி, அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் துணை புரியும்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டில் அனைவரது பங்களிப்பினையும் மனமார வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE