தி.மு.க., நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா?| Dinamalar

தி.மு.க., நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா?

Added : மே 14, 2022 | |
தாராபுரம் தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் தனசேகர், 57; தற்போது இதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். அதேசமயம் நகர இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோரும், நகர செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் நகர செயலாளர் பதவிக்கு, இளைஞரணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தருவதாக கூறி, வேறு ஒருவரை நியமிக்க, கட்சித் தலைமை முடிவு

தாராபுரம் தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் தனசேகர், 57; தற்போது இதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். அதேசமயம் நகர இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோரும், நகர செயலாளர் பதவிக்கு
போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நகர செயலாளர் பதவிக்கு, இளைஞரணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தருவதாக கூறி, வேறு ஒருவரை நியமிக்க, கட்சித் தலைமை முடிவு எடுத்ததாக, நேற்றிரவு தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., வார்டு நிர்வாகிகள், நகர அலுவலகத்தில் குவிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
பெரும்பாலான வார்டு நிர்வாகிகள், தனசேகரையே ஆதரிக்கின்றனர். அவருக்கே பதவியை தர வேண்டும். இல்லையேல் அனைவரும் ராஜினாமா செய்வோம். இதுகுறித்து கட்சித் தலைமை, செய்தித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X