முகநூலில் விளம்பரம்: ரூ.82 ஆயிரம் மோசடி| Dinamalar

முகநூலில் விளம்பரம்: ரூ.82 ஆயிரம் மோசடி

Added : மே 14, 2022 | |
விழுப்புரம்: கார் விற்பனை செய்வதாக கூறி 82 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால், 31; இவர், முகநுாலில் வந்த கார் விற்பனை விளம்பரத்தைப் பார்த்து, அதிலிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பேசிய நபர், இந்திய ராணுவத்தில்

விழுப்புரம்: கார் விற்பனை செய்வதாக கூறி 82 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால், 31; இவர், முகநுாலில் வந்த கார் விற்பனை விளம்பரத்தைப் பார்த்து, அதிலிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பேசிய நபர், இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாகவும், தனது காரை 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த காரை ராணுவ பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இதற்காக 82 ஆயிரம் ரூபாயை நந்தகோபால், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், காரை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார். புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X