மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 11 பேர் மாயம்

Added : மே 14, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில நாட்களில், வெவ்வேறு இடங்களில், 11 பேர் காணவில்லை என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.* மத்திகிரி அந்திவாடியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்,33, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 10ல், கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. * ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்தவர் பூபதி,24, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 5ல், வீட்டிலிருந்து


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில நாட்களில், வெவ்வேறு இடங்களில், 11 பேர் காணவில்லை என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மத்திகிரி அந்திவாடியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்,33, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 10ல், கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
* ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்தவர் பூபதி,24, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 5ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
* சூளகிரி பெரிய தின்னூரை சேர்ந்தவர் அம்பிகா, 22. இவர் தனது மூன்று வயது மகளுடன் சூளகிரி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
* சூளகிரி, சின்ன மாடனூரை சேர்ந்தவர் திம்மக்கா, 28. கடந்த,6ல், குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற திம்மக்கா மீண்டும் வீடு திரும்பவில்லை.
* பேரிகை, கே.என்.தொட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி, 20, தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார். கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
* பர்கூர் அடுத்த அம்மேரியை சேர்ந்தவர் கோகிலபிரியா, 19, டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 7ல், கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
* பாரூர், மேட்டு புலியூரை சேர்ந்தவர் இளம்பருதி,32; எம்.எஸ்.சி.,- பி.எட்., பட்டதாரி. கடந்த, 11ம் தேதி முதல் இவரை காணவில்லை.
* மத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் அண்ணவேல்,32, கூலித் தொழிலாளி. குடும்ப பிரச்னையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவிலலை.
* மத்தூர், ஈச்சங்காட்டை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 10ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.அவரது பெற்றோர் புகாரில், மேகநாதன், 20 என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.
*சிங்காரப்பேட்டை அடுத்த சின்ன கவுண்டனூரை சேர்ந்தவர் தீபா, 22. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X