செய்திகள் சில வரிகளில் ...கரூர்

Added : மே 14, 2022 | |
Advertisement
வாய்க்கால் துார்வாரும் பணி: கலெக்டர் ஆய்வுகரூர், மே 14-குளித்தலை அருகே, வாய்க்கால் துார் வாரும் பணியை, கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில், 285.50 லட்ச ரூபாய் மதிப்பில், சிறப்பு துார் வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், குளித்தலை பாதியக்காவல் காடு, நங்கவரம் காட்டுவாரி உள்ளிட்ட பகுதிகளில், வாய்க்கால்

வாய்க்கால் துார்வாரும்
பணி: கலெக்டர் ஆய்வு
கரூர், மே 14-
குளித்தலை அருகே, வாய்க்கால் துார் வாரும் பணியை, கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில், 285.50 லட்ச ரூபாய் மதிப்பில், சிறப்பு துார் வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், குளித்தலை பாதியக்காவல் காடு, நங்கவரம் காட்டுவாரி உள்ளிட்ட பகுதிகளில், வாய்க்கால் துார் வாரும் பணியை, கலெக்டர் பிரபு சங்கர், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் வரும், 30க்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, ஆர்.டி.ஓ., புஷ்பா தேவி, காவிரி ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி பொறியாளர்கள் ஸ்ரீதர், கார்த்திக், தாசில்தார் விஜயா உள்பட பலர் உடனிருந்தனர்.

மாரியம்மன் கோவிலில்
நவசண்டி யாகம்
கரூர், மே 14-
கரூர் மாரியம்மன் கோவிலில், சண்டி யாகம் நடந்தது.
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா கடந்த, 8ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 7:00 முதல், 11:45 மணி வரை மஹா சண்டியாகம் நடந்தது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், மஹா தீபாராதனை மற்றும் பக்தர்கள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
பி.டி.ஓ.,விடம் பண மோசடி
சைபர் கிரைம் போலீசார் வழக்கு
கரூர், மே 14-
கடவூர் பி.டி.ஓ.,விடம், பான் கார்டு பதிவு என கூறி, பண மோசடி செய்த மர்ம நபரை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், லிங்கத்துார் பகுதியை சேர்ந்தவர் அன்புமணி, 42; கடவூர் பஞ்சாயத்து யூனியனில், பி.டி.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். இவரது மொபைலுக்கு கடந்த மாதம், 6ல் பான் கார்டு பதிவு செய்யும்படி, அடையாளம் தெரியாத, நபரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய, பி.டி.ஓ.,வின் மகள் ஓப்பன் செய்து, சில விபரங்களை பதிவு செய்துள்ளார்.
சிறிது நேரத்தில், பி.டி.ஓ., அன்புமணியின் வங்கி கணக்கில் இருந்து, இரண்டு லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த பி.டி.ஓ., அன்புமணி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, பண மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

6வது மாநில மாநாடு
செவிலியர்கள் பயணம்
குளித்தலை, மே 14-
கும்பகோணத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க, 6வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மாநில பொது செயலாளர் நீலா தலைமையில், கரூர் மாவட்டத்திலிருந்து, அரசு ஆரம்ப சுகாதார மையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ் செயல்படும் மையங்களில், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய
சுகாதார செவிலியர்கள் என, 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனியார் பஸ் மூலம் மாநாட்டிற்கு சென்றனர்.

திருக்காம்புலியூரில்
மரக்கன்று பராமரிப்பு
கிருஷ்ணராயபுரம், மே 14-
திருக்காம்புலியூர் காவிரி படுகை பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை, பராமரிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூர் பஞ்., காவிரி படுகை பகுதியில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடந்தது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், வெயில் காலங்களில் மரக்கன்றுகள் காய்ந்து விடாமல் இருக்கும் வகையில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. இப்
பணியில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பிள்ளபாளையத்தில்
சாலை படுமோசம்
கிருஷ்ணராயபுரம், மே 14-
பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோவில் சாலை படுமோசமாக இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் செல்லும் சாலை, தார்ச்சாலையாக இருந்தது. தற்போது சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக வெற்றிலை, வாழை, ஆகிய விளை பொருட்களை வாகனங்களில் எடுத்து வரும்போது விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த சாலையை சரி செய்ய, பஞ்., நிர்வாகம் தேவையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனைவிக்கு மிரட்டல்
விடுத்த கணவன் கைது
கரூர், மே 14-
கரூர் அருகே, மனைவியை மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனா, 38; இவருக்கும், பன்னீர்செல்வம், 38, டிரைவர் என்பவருக்கும், பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக மோகனா, கணவர் பன்னீர் செல்வத்தை பிரிந்து கடந்த, மூன்று மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் ராம கிருஷ்ணபுரத்தில், டெக்ஸ் வேலைக்கு சென்று கொண்டிருந்த மோகனாவை, பன்னீர் செல்வம் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, மோகனா போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், பன்னீர் செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கரூர் போலீஸ் ஸ்டேஷனை
முற்றுகையிட்ட திருநங்கைகள்
கரூர், மே 14-
வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, கரூர் போலீஸ் ஸ்டேஷனை, திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் அதிகாலை, பயணிகளிடம் வசூல் செய்த திருநங்கைகளை, போலீசார் விரட்டினர். அப்போது, ஆத்திரமடைந்த திருநங்கைகள் இரண்டு அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், ஐந்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதை கண்டித்து, நேற்று மாலை, 12 திருநங்கைகள் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது, அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி விபரீத முடிவு
கரூர், மே 14-
தான்தோன்றிமலை அருகே, கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கொளந்தானுார் பகுதியை சேர்ந்தவர் அன்புமணி, 32; கூலி தொழிலாளி. இவருக்கும், நிர்மலா, 32, என்பவருக்கும், பல ஆண்டுக்கு முன், திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, அன்புமணி கடந்த ஒன்றரை ஆண்டாக, தனியாக வசித்து வருகிறார். இதனால், மனமுடைந்த அன்புமணி, நேற்று முன்தினம், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X