சென்னை: ஐந்து மாவட்டக் கவுன்சிலர்கள் உட்பட ஆறு பேர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்டக் கவுன்சிலர்கள் அழகேசன் நடராஜன் பாலசரஸ்வதி தேவராஜ் தேவ விண்ணரசி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் துாத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி இணை செயலர் குருராஜும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுஉள்ளார்.இதற்கான உத்தரவை கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பிறப்பித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE