மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,105 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,347 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 12 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 56.79 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை: திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 35.69 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 10 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 7.38 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE