சோமூர் பிரிவில் மினி ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : மே 14, 2022
Advertisement
சோமூர் பிரிவு பகுதியில், மினி ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரிலிருந்து, நெரூர், திருமுக்கூடலுார், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், அரசு காலனி வழியாக ஒத்தக்கடை வரை சென்று, பின், கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது. கரூர்-நெரூர் சாலையில் கோயம்பள்ளி, சோமூர் போன்ற


சோமூர் பிரிவு பகுதியில், மினி ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரிலிருந்து, நெரூர், திருமுக்கூடலுார், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், அரசு காலனி வழியாக ஒத்தக்கடை வரை சென்று, பின், கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது. கரூர்-நெரூர் சாலையில் கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு சாலை பிரியும் இடத்தில், நான்கு வழி போக்குவரத்து நடக்கிறது.
இதே இடத்தில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய இப்பகுதியில், இரவு நேரங்களில் அதிகளவு வாகன போக்கு
வரத்து நடக்கிறது. வாகனங்களின் அதிவேகம் காரணமாக, இந்த சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
எனவே, விபத்துகளை கட்டுப்படுத்த, சோமூர் பிரிவில் மினி ரவுண்டானா அமைத்து, கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X