நாமக்கல் அரங்கநாதர் கோவில் தேர், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, வரும், 20ம் தேதி வெள்ளோட்டம் நடக்கிறது.
நாமக்கல் அரங்கநாதர் கோவில் தேர் பழுந்தடைந்திருந்தது. அதை, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில், 45 மரச்சிற்ப கலைஞர்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர். பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி, பயன்பாட்டுக்கு தேர் கொண்டு வரப்படும் என எதிர்பார்த்த நிலையில், முழுமையாக பணிகள் நிறைவடையாததால், அப்போது அரங்கநாதர் தேர் ஓடவில்லை.
தேர் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையடுத்து, வரும், 20ம் தேதி, உற்சவ மூர்த்தி தேரில் எழுந்தருளி, வீதியுலா வரும் வகையில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அன்று காலை, 6:30 மணி முதல், 7:30 மணிக்குள், நாமக்கல் நகரின் முக்கிய வீதிகளில் தேர் வலம் வர உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE