டூவீலர் மெக்கானிக்கை கத்தியால் குத்திய கார் டிரைவரை, மெக்கானிக் நண்பர்கள் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்--சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன். 29. கார் டிரைவர். இவருக்கும், மேதர்மாதேவியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் விக்னேஷ், 24, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று இரவு, 9:30 மணிக்கு, செல்லப்பா காலனி மாதா கோவில் பின்புறம் பிரபாகரனுக்கும், விக்னேஷிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிரபாகரன், விக்னேசை கத்தியால் குத்தியுள்ளார். தகவல் அறிந்த அங்கு வந்த விக்னேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவரை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தனது நண்பரை குத்தியதால் ஆவேசம் அடைந்த விக்னேஷ் நண்பர்கள், பிரபாகரனை, சரமாரியாக கத்தியால் குத்தினர். அதில், சம்பவ இடத்திலேயே பிரபாகரன் உயிரிழந்தார். தகவலறிந்து நாமக்கல் எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி, டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE