மத்திய அரசின் திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Added : மே 14, 2022
Advertisement
எருமப்பட்டி யூனியனில், மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, தேசிய கண்காணிப்பு குழு அலுவலர் ஆய்வு செய்தார்.எருமப்பட்டி யூனியனில், மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து, ஆய்வு செய்ய, நேற்று ‍புதுடில்லியில் இருந்து, தேசிய கண்காணிப்பு அலுவலர்

எருமப்பட்டி யூனியனில், மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, தேசிய கண்காணிப்பு குழு அலுவலர் ஆய்வு செய்தார்.
எருமப்பட்டி யூனியனில், மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து, ஆய்வு செய்ய, நேற்று ‍புதுடில்லியில் இருந்து, தேசிய கண்காணிப்பு அலுவலர் ரகுநாத் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ரெட்டிபட்டி, பொட்டிரெட்டிபட்டி, பவித்திரம்புதுார், வடவத்துார் ஆகிய, 4 பஞ்.,களில், ஒவ்வெரு பஞ்.,சிலும், தலா, 10 பணிகள் வீதம் ஆய்வு ‍செய்தனர்.
அப்போது, பிதரமரின் வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் கட்டப்பட்டுள்ள முறைகள் குறித்து, அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து பஞ்.,சில் செயல்படுத்தப்படும் என்.ஆர்.ஜி.எஸ் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் உதவி செயற்பொறியாளர் கணேசபெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஒன்றிய பொறியாளர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X