புதுச்சத்திரம் அருகே உள்ள ஆர்.புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் வீடு, மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே, 6ம் தேதி, காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, முளைப்பாரியுடன் தீர்த்தக்குட ஊர்வலம், விநாயகர் பூஜை, புண்யாக வாசனை, கலச ஆவாஹனம், முதல் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணஹுதி நடந்தது. பின் தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று வேத பாராயணத்துடன் மகாகணபதி, நவக்கிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்களுடன், மகா கணபதி அபிஷேகமும், பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பின் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE