முத்துமலை முருகனை தரிசித்த முன்னாள் முதல்வருக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் சுவாமி உள்ளது. அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் மண்டல பூஜை நேற்று நடந்தது. இதில், பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யாக பூஜை செய்து, முருகன் சிலையின் கையில் இருக்கும் வேல் மீது, முதல் முறை பால் ஊற்றும் நிகழ்வு நடந்தது. பழனிசாமி, அவரது மனைவி ராதா, மகன் மிதுன் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
சுவாமி முன் பூஜை செய்து, 5 அடி உயரத்தில் வெள்ளியால் செய்த வேலை, கோவில் நிர்வாகி ஸ்ரீதர், பழனிசாமியிடம் வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சண்முகம், பரஞ்ஜோதி, எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE