கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : மே 14, 2022
Advertisement
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து, 593 கன அடியாக அதிகரித்த நிலையில், தென்பெண்ணையில் ரசாயன நுரை தேங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 480 கன அடி ந ீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், 480 கன அடியும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து, 593 கன அடியாக அதிகரித்த நிலையில், தென்பெண்ணையில் ரசாயன நுரை தேங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 480 கன அடி ந ீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், 480 கன அடியும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நீர்ப்
பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 593 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 480 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.18 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட, 480 கன அடி நீரும், நுங்கும், நுரையுமாக வெளியேறியது. அதனால், ஆற்றில் ஆங்காங்கு ரசாயன நுரை தேங்கி காற்றில் பறந்த வண்ணம் இருந்தது. மேலும், தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X