ஈரோட்டில் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில், 40 பவுன் நகை, ரொக்கப்பணம் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 65; ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். திருச்சியில் உள்ள மகளை பார்க்க, நேற்று முன்தினம் இருவரும் சென்றனர்.
இந்நிலையில் உறவினர் பிரபு, தனது மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க, தமிழ்செல்வன் வீட்டுக்கு நேற்று காலை வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைந்து, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து தமிழ்செல்வன், தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடைந்து கிடந்த கதவு, பீரோ, சிதறி கிடந்த பொருட்களை ஆய்வு செய்தனர். திருச்சியில் இருந்து தமிழ்செல்வன் மனைவியுடன் வந்தார். அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில், 40 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE