ஆத்தூர் வழியே ஜைன துறவிகள் நடைபயணம்| Dinamalar

ஆத்தூர் வழியே ஜைன துறவிகள் நடைபயணம்

Added : மே 14, 2022 | |
ஆத்துார் வழியே ஜைன மத துறவிகள், 7 பேர் நடைபயணமாக சென்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, துறவி விமல்சாகர்ஜி, 55. பகவான் மஹாவீரரின் வழிவந்த ஜைன மத தலைமை அடிகளாக உள்ளார். இவரது தலைமையில் ஏழு துறவிகள், அகிம்சை, மகாவீரரின் போதனை, நல்ல எண்ணம், நன்னெறி, போதை விடுவிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச்சில் கோவையில் பயணம் தொடங்கியது. நேற்று,


ஆத்துார் வழியே ஜைன மத துறவிகள், 7 பேர் நடை
பயணமாக சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, துறவி விமல்சாகர்ஜி, 55. பகவான் மஹாவீரரின் வழிவந்த ஜைன மத தலைமை அடிகளாக உள்ளார். இவரது தலைமையில் ஏழு துறவிகள், அகிம்சை, மகாவீரரின் போதனை, நல்ல எண்ணம், நன்னெறி, போதை விடுவிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச்சில் கோவையில் பயணம் தொடங்கியது. நேற்று, ஆத்துார் வழியே வந்தனர். காட்டுக்கோட்டைக்கு சென்ற அவர்கள், அங்குள்ள திருமண மண்டபத்தில் ஓய்வு எடுத்து இன்று காலை மீண்டும் நடைபயணத்தை தொடங்கி வி.கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து, துறவிகள் கூறுகையில், 'மகாவீரரின் போதனைகளை மக்கள் அறியவே நடைபயணம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தினமும், 10 முதல், 20 கி.மீ., பயணிக்கிறோம். கோவையில் தொடங்கிய பயணம் சென்னையில் முடியும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X