அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.96 லட்சம் 'அபேஸ்'

Added : மே 14, 2022
Advertisement
அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 5.96 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் லாரன்ஸ்,37. இவர், பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கூடுதல் சம்பளத்தில் வேலை தேடி இணையதளத்தை பார்த்தார். அப்போது


அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 5.96 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் லாரன்ஸ்,37. இவர், பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கூடுதல் சம்பளத்தில் வேலை தேடி இணையதளத்தை பார்த்தார். அப்போது இணையதளம் வாயிலாக ராபர்ட் லாரன்சை தொடர்பு கொண்ட ஆதித்யா சர்மா, மணிஷ் நாயர் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் தாங்கள் வேலை வாங்கி தருகிறோம். ஜெர்மனி நாட்டில் மாதம், 85 ஆயிரம் சம்பளத்தில் வேலை உள்ளது என தெரிவித்தனர்.
இதை நம்பிய ராபர்ட் லாரன்சிடம், அவர்கள் பதிவு கட்டணம், ஐ.டி., உருவாக்குதல் கட்டணம், பயிற்சி கட்டணம், முன்பணம் என மொத்தம், 5.96 லட்சம் கட்ட வேண்டுமென கூறியுள்ளனர். ராபர்ட் லாரன்ஸ் அந்த தொகையை அவர்கள் கூறிய குறிப்பிட்ட இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன்பின்னர் அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் அவர்களை தொடர்பும் கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராபர்ட் லாரன்ஸ், இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X