டிரைவர்களுக்கு பற்றாக்குறை; பஸ்களை இயக்குவதில் சிக்கல்

Added : மே 14, 2022
Advertisement
விரைவு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்களுக்கு பற்றாக்குறையால், பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிற போக்குவரத்துக்கழகங்களில் இருந்து ஆள் பிடிக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின், 25 பணிமனைகளில், 1,220 பஸ்கள் பராமரிக்கப்பட்டு, 1,020 தடங்களில் இயக்கப்படுகின்றன. அதன் பராமரிப்பு, இயக்கம் உள்ளிட்ட பணிகளில், 7,150


விரைவு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்களுக்கு பற்றாக்குறையால், பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிற போக்குவரத்துக்கழகங்களில் இருந்து ஆள் பிடிக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின், 25 பணிமனைகளில், 1,220 பஸ்கள் பராமரிக்கப்பட்டு, 1,020 தடங்களில் இயக்கப்படுகின்றன. அதன் பராமரிப்பு, இயக்கம் உள்ளிட்ட பணிகளில், 7,150 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 4,350 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். 4 ஆண்டாக பணி ஓய்வு பெற்றவர், மரணம்
அடைந்தவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு பணிபுரிய இயலாதவருக்கு மாற்றாக ஆட்கள் எடுக்கப்படாத நிலையில், நடப்பு மாதத்தில், 300 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதனால், தற்போதைய பணியாளர் எண்ணிக்கை, மேலும் சரியும் சூழல் உருவாகி
உள்ளது.
ஏற்கனவே, எஸ்.இ.டி.சி., பஸ்களை தடையின்றி இயக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதை சரிசெய்ய, சென்னை, விழுப்புரம், கோவை, மதுரை, கும்பகோணம், நெல்லை கோட்டங்களில் இருந்து, விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு டிரைவர்களை மாற்றுப்பணியாக அழைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அனைத்து கோட்டங்கள் சார்பில், விரைவு போக்குவரத்துக்கழக பணிக்கு செல்வோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, டிரைவர், கண்டக்டர்களுக்கு, சேலம் கோட்ட நிர்வாகம் அனுப்பிய
சுற்றறிக்கை: கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களை, அதிக அளவில் பயணியர் பயன்படுத்துவதோடு முன்பதிவும் அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் போதிய பஸ்களை, பயணியர் தேவைக்கேற்ப இயக்க வேண்டும். அத்துடன் திருவிழா காலங்களில் விரைவு பஸ் சேவைகளை பூர்த்தி செய்ய, நிரந்தர, முகமை(தற்காலிக பணி மாற்றம்) அடிப்படையில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிய டிரைவர்களிடம் விருப்ப மனு பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டிரைவர்கள் கோரிக்கைப்படி, அவர்கள் மண்டலங்களில் உள்ள பணிமனைகளில் பணியமர்த்தப்படுவர். அதனால், விருப்பமுள்ள டிரைவர்கள், அதற்கான உரிமத்துடனும், கண்டக்டர் உரிமம் வைத்துள்ளவர், 'பயோ - டேட்டா'வுடனும், தலைமை அலுவலக பணியாளர் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X