ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,200 கன அடியாக சரிவு

Added : மே 14, 2022
Advertisement
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 5,200 கன அடியாக சரிந்தது.ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இந்நிலையில், நேற்று மழை குறைந்ததால்,


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 5,200 கன அடியாக சரிந்தது.
ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இந்நிலையில், நேற்று மழை குறைந்ததால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு குறைந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 7,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,200 கன அடியாக நீர் வரத்து
சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X