மாணவர்களுக்கு மதம் சார்ந்த கல்வி அவசியம்!

Added : மே 14, 2022
Advertisement
மதுரை: ''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மதம் சார்ந்த கல்வியை தமிழக அரசு கற்றுத்தர வேண்டும்,'' என, விஸ்வ ஹிந்து பரிஷத் எனப்படும், வி.எச்.பி., அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலர் ஸ்தாணுமாலயன் மதுரையில் தெரிவித்தார். மதுரையில் ஜூன் 4, 5ல் பரவை ஆகாஷ் கிளப்பில், துறவிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்பு கமிட்டியின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 'தினமலர்' இணை
 மாணவர்களுக்கு மதம் சார்ந்த கல்வி அவசியம்!

மதுரை: ''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மதம் சார்ந்த கல்வியை தமிழக அரசு கற்றுத்தர வேண்டும்,'' என, விஸ்வ ஹிந்து பரிஷத் எனப்படும், வி.எச்.பி., அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலர் ஸ்தாணுமாலயன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரையில் ஜூன் 4, 5ல் பரவை ஆகாஷ் கிளப்பில், துறவிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்பு கமிட்டியின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரை தேவகி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நாகேந்திரன், வி.எச்.பி., மாநில துணைத்தலைவர் கதிர்வேல், மதுரை நிர்வாகி வேணுகோபால், கமிட்டி ஒருங்கிணைப்பு செயலர் சேதுராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் கலந்து கொண்டனர். வி.எச்.பி., ஸ்தாணுமாலயன் கோரிக்கை
இணை பொதுச் செயலர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது:மதுரையில் ஜூன் 4, 5ல் நடக்க உள்ள துறவிகள் மாநாட்டில் ஆதீனங்கள் உட்பட 300 துறவிகள் பங்கேற்க உள்ளனர். அரசியல், அரசு, அரசியல்கட்சி அல்லது பிற மதத்துக்கோ இந்த மாநாடு விரோதமானது அல்ல. ஹிந்து சமுதாயத்தை பலப்படுத்துவதற்காக நடத்தப்படும் மாநாடு. ஹிந்துக்கள் குடும்பம், கல்வி நிலையங்கள், பண்பாடு, கோவில், பொருளாதாரம், வாழ்க்கை நெறி, அனுஷ்டானங்களை எப்படி மேற்கொள்வது என துறவிகள் சந்தித்து பேச உள்ளனர். அகில இந்திய பொதுச் செயலர் மிலிந்த் பராந்தே, துறவிகள் பேரவை அசோக் திவாரி ஜி, ராமஜென்மபூமி பொருளாளர் கோவிந்த குருசாமி உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த துறவிகள் பங்கேற்கின்றனர். மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிந்து பண்பாட்டு முறையில் உள்ள கல்வியை தமிழக பள்ளிகளில் இருந்து அகற்றி விட்டனர். கிறிஸ்தவ, இஸ்லாம் பள்ளிகளில் அவர்களது மதம் சார்ந்த கல்வியைத் தருகின்றனர். ஹிந்து குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளிகளில் மதமாற்றம் செய்கின்றனர். அரசு நடத்தும் அனைத்து கல்வி நிலையங்களிலும் அவரவர் சமயத்தை பற்றிய கல்வி கற்றுத் தர வேண்டும். மதச்சார்பற்ற அரசு என்று சொன்னால் எல்லாருக்கும் எல்லாமும் சமமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பெங்களூரு சென்று ஒரு மாத கால பயிற்சி பெற்ற போது, எளிமையை கற்றுக் கொண்டேன். மக்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடிந்தது. நம் அறியாமைக்கு நம்மை தான் குற்றம் சொல்ல வேண்டும். அதிலிருந்து மீள்வது குறித்தும் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மதுரை மாவட்ட தலைவர் பாண்டியன் ஏற்பாடுகளை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X