அம்பத்துார்:
காவல் வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளுக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்று, கஞ்சா 'சப்ளை' செய்ய முயன்றவர் கைதானார்.அம்பத்துார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, நேற்று மாலை ௩:௪௫ மணியளவில், ௧௫ விசாரணை கைதிகள், மீண்டும் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அந்த போலீஸ் வாகனத்தில், கைதிகளின் பாதுகாப்பு பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாவு தலைமையில், 19 காவலர்கள் இருந்தனர்.அவர்கள் சென்ற வாகனம், அம்பத்துார் தொழிற்பேட்டை, மாநகர பேருந்து நிலையத்தை கடந்த போது, கைதிகள் சென்ற வாகனத்தை, இரு சக்கர வாகனத்தில் ஒருவர், வேகமாக பின் தொடர்ந்து நெருங்கினார்.உஷாரான காவலர்கள், தங்களது வாகனத்தை நிறுத்தி, அவரை மடக்கி பிடித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர், அம்பத்துார், காமராஜபுரம், குளக்கரை தெருவைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் பார்த்திபன், 22, என தெரிந்தது. அவரிடம், 15 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.அதை, கைதிகளுக்கு கொடுக்க முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE