பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி தலைவியின் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 75; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரது மூத்த மகன் சிவகுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடந்த ஊராட்சி தேர்தலில் பெரியசாமியின் மூத்த மருமகள் கோமளவள்ளி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு மனைவி மணிமேகலை வெற்றி பெற்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பெரியசாமியை ஊராட்சி தலைவி மணிமேகலை, இவரது கணவர் விஷ்ணு, 28; மாமனார் கலியன், 56 உட்பட ஏழு பேர் கட்டையால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகராறை தடுத்ததில் தாக்கப்பட்டு காயமடைந்த பெரியசாமியின் இளைய மகன் கோபி, மனைவி சங்கீதா ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின்படி, விஷ்ணு, இவரது தந்தை கலியன், சகோதரர் அஜய்குமார், ஊராட்சி தலைவி மணிமேகலை, உறவினர் சுப்ரமணியன், விஷ்ணுவின் வடமாநில உறவினர்கள் இருவர் உட்பட ஏழு பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.இந்நிலையில், விஷ்ணு, அவரது தந்தை கலியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஊராட்சி தலைவி மணிமேகலை உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE