மயிலாடுதுறை அருகே குளத்தில் முதலை நடமாட்டம்

Added : மே 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முதலை ஒன்று தென்படுவதாகவும், அடிக்கடி குளக்கரையில் ஏறிவந்து இளைப்பாறுவதை ஊர் பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக வருவாய்த்துறை மற்றும் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சீர்காழி வனச்சரக
மயிலாடுதுறை அருகே  குளத்தில் முதலை நடமாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முதலை ஒன்று தென்படுவதாகவும், அடிக்கடி குளக்கரையில் ஏறிவந்து இளைப்பாறுவதை ஊர் பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக வருவாய்த்துறை மற்றும் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் உத்தரவுப்படி வனவர் கதாநாயகன் தலைமையில் வனத்துறையினர் ஓமக்குளத்திற்கு சென்று முதலை பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், கரைகளில் கோழி இறைச்சிகளை போட்டும் முதலில் பிடிப்பதற்கு பொறிவைத்து உள்ளனர். ராஜன் வாய்க்கால் வழியாக முதலை குளத்திற்கு வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குளத்தில் இறங்கி குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் வருவாய்த்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
14-மே-202216:35:40 IST Report Abuse
r.sundaram கழக ஆட்சியில் முதலை கூட பிரீ ஆக வெளியில் நடமாடுகிறது பாருங்கள்.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
14-மே-202220:46:21 IST Report Abuse
naadodiபண முதலைகளுடன் நிஜ முதலையும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X